தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்குச் சீல்!

திருப்பூர்: வேலம்பாளையம் அருகே முறையான அனுமதி இன்றி செயல்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.

Drinking Water Company

By

Published : Nov 15, 2019, 9:09 PM IST

திருப்பூர் அருகே வேலம்பாளையம் பகுதியில் குடிநீர் விற்பனை செய்யும் போலி நிறுவனம் ஒன்று செயல்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அரசு அலுவலகர்கள் குடிநீர் விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்குச் சீல்!

அதில் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் மக்களுக்கு தீங்கு விலைவிக்கும் முறையில் குடிநீர் தயாரித்து வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் போலியாக செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்குச் சீல் வைத்தனர்.

மேலும், வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 23 கேன்களையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்க: "2025ஆம் ஆண்டுக்குள் அனைத்துவகை கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் - குடிநீர் வழங்கல் வாரிய இயக்குநர் பிரபு சங்கர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details