தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் பெண் மீது மோதிவிட்டு தப்ப முயன்ற ‘காவல்’ குடிமகன்!

திருப்பூர்: மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த காவலர், பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur policeman driving drunk, குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய காவலர்

By

Published : Oct 22, 2019, 3:12 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்குட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே செல்லும்போது சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

சிறிது தூரம் துரத்திச் சென்ற பொதுமக்கள், அவரை அவினாசி பேருந்து நிலையம் அருகே மடக்கிப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய காவலர்

உடனடியாக அங்கிருந்த மக்கள் அவிநாசி காவல் துறையினருக்கு தகவலளித்து மயில்சாமியை ஒப்படைத்தனர். காவலர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வக்கீல் கிட்டயேவா...!’ - சீறிய போதை வழக்கறிஞர்: காணொலி வைரல்

ABOUT THE AUTHOR

...view details