தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் உள்ள சாய ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபரை, சிசிடிவி காட்சிகளை கொண்டு பொதுமக்களே மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

The public folded the two wheeler theft
The public folded the two wheeler theft

By

Published : May 28, 2020, 9:47 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பாச்சாங்காட்டு பாளையத்தில் உள்ள சாய ஆலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை தகவலறிந்த சாய ஆலை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

அதில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. அதன்பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு பொதுமக்கள் விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த வேல்முருகன் (40) என்பவருக்கு இத்திருட்டில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தங்கியுள்ள பகுதிக்கு சென்ற பொதுமக்கள், அவரை அடித்து துவைத்து விசாரித்ததில், உடன் வந்த இரண்டு பேர் யார் என்றே தெரியவில்லை என்றும், பைக்கை திருடி தந்தால் பணம் தருவதாக என்னிடம் கூறினர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

இதையடுத்து வேல்முருகனை பல்லடம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவருடன் வந்த மற்ற இருநபர்கள் யார் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:345 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனை செய்த 8 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details