தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 11:01 PM IST

ETV Bharat / state

'நெகிழி கொடுத்தால் எலெக்ட்ரிக் சைக்கிள் பரிசு' -  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதி

திருப்பூர்: 'நெகிழி இல்லா திருப்பூர்' திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், அதிகளவில் நெகிழி கொண்டு வந்து கொடுக்கும் மாணவர்களுக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

tiruppur collector


பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கும் பயன்படுத்தப்படாத பழைய நெகிழிப் பொருட்களுக்குப் பதிலாக, நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தைத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

நெகிழி இல்லா திருப்பூரை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் கொண்டு வரும் பழைய நெகிழிப் பொருட்களுக்குப் பதிலாக நோட்டுப் புத்தகங்கள், பென்சில் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

நெகிழி இல்லாத திருப்பூர் திட்டத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியர்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "திருப்பூரில் உள்ள ஆயிரத்து 374 அரசுப் பள்ளிகளிலும் 600 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதிகப்படியான நெகிழிப் பொருட்களைக் கொண்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்கப்படும்" என்றார்.

இதையும் வாசிங்க : 'ஹீரோ' படத்திற்கு வந்த புதிய சிக்கல்

ABOUT THE AUTHOR

...view details