தாராபுரம் சத்தியா தியேட்டர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் ரத்த காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடலில் பலத்த காயங்களுடனும் ரத்த கரைகளுடன் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்குவந்த போலீசார் விசரைணையில் நபர் இறந்து விட்டதாக தெரியவந்தது. கிடந்தவரின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையின் சோதனை செய்ததில் அது தாராபுரம் அகமுடையார் தெருவைச் சேர்ந்த சரவணன் என்றும் அவரை விறகுக் கட்டையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது.
தாராபுரத்தில் விறகுக் கட்டையால் அடித்து இளைஞர் கொலை
தாராபுரம்: சத்தியா தியேட்டர் அருகே சரவணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் விறகுக் கட்டையால் அடித்து கொலை செய்துயுள்ளனர்.
murder
அப்பகுதியில் உள்ள சாக்கடையில் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட விறகுக் கட்டை கிடப்பதையும் கண்ட போலீசார் தடயங்களை சேகரித்ததோடு சரவணனின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இவரை யார் எதற்காகக் கொலை செய்தார்கள் எனத் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள நபர்களையும் CCTV-யின் உதவியுடன் தடயம் தேடிவருகின்றனர்.