திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் கார்த்திக். இவர் ஜனவரி 24ஆம் தேதி அப்பகுதி வழியாக அனுமதியின்றி கடத்திச்செல்லப்பட்ட லாரியை மடக்கிப் பிடித்தார்.
இதையறிந்த, பொங்கலுார் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, மணல் லாரியை விடுவிக்குமாறு கார்த்திக்கிடம் தொலைபேசியில் எச்சரிக்கும் கேட்பொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
அந்தக் கேட்பொலியில் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் பேசும் உரையாடல் வருமாறு:
வருவாய் அலுவலர் - ஹலோ...
- கிராம நிர்வாக அலுவலர் - சொல்லுங்க மேடம்.
வருவாய் அலுவலர் - ஏதோ வண்டி நீங்க பிடிச்சி வச்சிருங்கீங்களாமே...
- கிராம நிர்வாக அலுவலர் - எந்த வண்டி மேம்?
வருவாய் அலுவலர் - நீங்கதான காட்டூர் வி.ஏ.ஓ.?
- கிராம நிர்வாக அலுவலர் - ஆமா நா தான் பிடிச்சு வச்சிருக்கேன்.
வருவாய் ஆய்வாளர் - எதுக்கு? இதுவரைக்கும் தகவல் நீங்க சொல்லல...
- கிராம நிர்வாக அலுவலர் - இல்லைங்க இப்பதான் பிடிச்சேன். பாத்துட்டுதான சொல்ல முடியும் கரெக்டா இருக்கானு.
வருவாய் ஆய்வாளர் - அவங்களாம் பர்மிட்டோட ஓட்டிட்டு இருங்காங்க.
- கிராம நிர்வாக அலுவலர் - பர்மிட் கரெக்ட்டா இல்லைங்க, அடிச்சு எழுதியிருக்கு.
வருவாய் ஆய்வாளர் - இல்ல, ஒரு விஷயம் சொல்றே கேளுங்க.
- கிராம நிர்வாக அலுவலர் - சொல்லுங்க.
வருவாய் ஆய்வாளர் - அவங்க தாசில்தாரு கலெக்டரு எல்லாரும் வரையிலும் அவங்க பார்க்குறாங்க. நீங்க எப்படி ரிப்போர்ட் பண்ணுவீங்க?
- கிராம நிர்வாக அலுவலர் - மேம் உங்களுக்கு என்ன பார்த்துருக்காங்க?
அப்போது வருவாய் ஆய்வாளர் ஏதோ சொல்கிறார்...
- கிராம நிர்வாக அலுவலர் - என்ன மேம் சொல்றீங்க, அவங்கள பிடிச்சிருக்கேன் பர்மிட் தப்பு.
வருவாய் ஆய்வாளர் - என்ன பண்ணுவீங்க நீங்க, எப்படி அப்ளை பண்ணுவீங்க சொல்லுங்க, எப்படி மேலிடத்தில தெரிவிப்பீங்க சொல்லுங்க? ஆர்ஐ-க்கு இதுவரைக்கும் நீங்க எதுக்கு கூப்புட்டு சொல்லல. சரி நீங்க எப்படி அப்ளை பண்ணுவீங்க. மணியார்டர் ஃபில் பண்ணியிருக்காருனு சொல்லி ரிப்போர்ட் போடுவீங்களா?
- கிராம நிர்வாக அலுவலர் - பண்ணலாம் மேம். ஏன் சப் கலெக்டருக்கு கொண்டுபோகக்கூடாதுங்களா?
வருவாய் ஆய்வாளர் - அப்படியெல்லாம் இல்லையே! ஆர்ஐ பார்க்கணும்.
- கிராம நிர்வாக அலுவலர் - ஏ... வந்து பாருங்க.
வருவாய் ஆய்வாளர் - அது எப்படி நான் கேட்டு நா தெரிஞ்சு பார்க்கணுமா?
- கிராம நிர்வாக அலுவலர் - இப்பதா மேம் கரெக்டானு பார்த்துட்டு உங்கள கூப்புட முடியும்.
வருவாய் ஆய்வாளர் - நீங்க எதுனாலும் எனக்கு ஒருதடவ இன்ஃபார்ம் பண்ணமாட்றீங்க.
- கிராம நிர்வாக அலுவலர் - இப்பதான் மேம் பார்த்துட்டு இருக்கோம். பார்த்துட்டுதான் உங்கள கூப்புடுவோம்.
வருவாய் ஆய்வாளர் - தாசில்தார் மொதகொண்டு கலெக்டர் வரை அவங்க கவனிச்சிட்டு இருக்காங்க.
- கிராம நிர்வாக அலுவலர் - கவனிச்சிட்டு இருக்காங்களா! என்ன மேம் பர்மிட் தப்பா இருக்குது.
வருவாய் ஆய்வாளர் - பர்மிட் தப்பா இருந்தா உங்களுக்கு என்னங்க... (ஏதோ சொல்லவருகிறார்). மணியக்காரரு (வி.ஏ.ஓ.) சீஸ் பண்ணலாம்னு எங்கங்க இருக்குது?
- கிராம நிர்வாக அலுவலர் - அப்பறோம் வேற யார பிடிக்கலாமுங்க?
வருவாய் ஆய்வாளர் - ஆர்ஐ-க்குதான் சீஸ் பண்ணுற அதிகாரம் இருக்குங்க.
- கிராம நிர்வாக அலுவலர் - அப்ப வாங்க வந்து பிடிங்க!
வருவாய் ஆய்வாளர் - நீங்க சொல்லி நா ஏன் பிடிக்கணும்? நா பார்த்துக்குறேன் என்னோட ஏரியாவுக்கு வரப்ப...
- கிராம நிர்வாக அலுவலர் - ஒங்க ஏரியா எதுங்க?
வருவாய் ஆய்வாளர் - நா கண்ணுல பார்க்குறப்ப நா பிடிச்சுக்குறேன்.
- கிராம நிர்வாக அலுவலர் - ஆக்சுவலா காட்டூர் உங்க கட்டுப்பாட்டுலதான இருக்கு.
வருவாய் ஆய்வாளர் - நா கண்ணு பார்க்குறப்ப நா பிடிச்சுக்குறேன் சரிங்களா.(என்று சொல்லி செல்லிடைப்பேசி அழைப்பு அணைக்கிறார்)
கிராம நிர்வாக அலுவலரை மிரட்டும் வருவாய் ஆய்வாளர் இவர்களது இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதையும் படிங்க: வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... ‘வா குவாட்டர் கட்டிங்’ என்றழைத்த நிறுவனம்!