தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைவருக்கும் வீடு திட்டம் - சலுகை வழங்கக்கோரி பொதுமக்கள் மனு

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகற்றப்படும் குடிசை வீடுகளுக்கு மாற்றாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளுக்கு பங்களிப்பு தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொதுமக்கள் மனு

By

Published : Jul 16, 2019, 3:19 PM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 49வது வார்டான ஆலங்காடு பகுதியில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் சலுகை கோரி பொதுமக்கள் மனு

இதற்கு மாற்றாக அந்த பகுதியில் குடியிருந்த மக்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்கள் பங்களிப்பு தொகையாக ரூ.1.10 லட்சம் செலுத்த வேண்டும் என அறிவுறித்தினர்.

இதையடுத்து பங்களிப்பு தொகை அதிகம் உள்ளதால் தொகையை கட்ட இயலாது என்றும், இந்த தொகையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details