திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டுக்குட்பட்ட மும்மூர்த்தி நகர் , கருப்பராயன் நகர் , லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்புக்கு மத்தியில் மாநகராட்சி சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கு, நிரந்தரமாக அந்த இடத்திலேயே அமைந்துவிட்டது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் குப்பைக்கிடங்கினை இடமாற்றக்கோரி பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியுள்ளனர் .
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் முகத்தில் மாஸ்க் அனிந்தபடி திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பலனில்லாததால் வடக்கு வட்டாட்சியரை வரவழைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..!