தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமூர்த்தி வாய்க்கால் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருப்பூர்: கோடைகாலத்தில் திருமூர்த்தி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருமூர்த்தி வாய்க்கால் திறப்பு

By

Published : Apr 26, 2019, 5:41 PM IST

தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் சதத்தையும் தாண்டி சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள மக்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கொடைக்கானல், ஊட்டி என்று சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், மக்கள் வெயிலை எதிர்கொள்வதற்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கோடைகாலத்தில் வெயிலை தாங்குவதற்கு ஏதுவாக மக்கள் திருமூர்த்தி வாய்க்காலில் குளித்து மகிழ்கின்றனர். இந்த வாய்க்கால் சில வாரங்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமூர்த்தி வாய்க்கால் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details