தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமுறை மீறல் : குழந்தையை நடனமாட வைத்து பரப்புரை

திருப்பூர்: குழந்தையை நடனமாடவைத்து தேர்தல் பரப்புரையை அதிமுகவினர் மேற்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

file pic

By

Published : Apr 4, 2019, 8:43 AM IST

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆணந்தனை ஆதரித்து தமிழகத்தின் துணை முதல்வரும் , அதிமுக ஒருங்கினைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார்.

தேர்தல் விதிமுறைகளில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ அல்லது தேர்தல் பணிகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒன்றாகும்.

இந்நிலையில் அதிமுக பரப்புரைக்கூட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருக்க நடனக்குழுவின் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இதில் தேர்தல் விதிமுறையை மீறும் வகையில் திருப்பூர் குமார் நகரைசேர்ந்த 13 வயது சிறுமியை நடனமாட வைத்திருந்தனர். இவர்களோடு அதிமுகவினரும் மேடையில் குத்தாட்டம் போட்டது பார்ப்பவர்களிடத்தில் முக சுழிப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details