திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆப்ரேட்டர்கள் பெற்றுக்கொண்டு அதில், தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.
அரசு செட்-டாப் பாக்ஸ்களில் தனியார் கனெக்சனா? உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
திருப்பூர் : அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களில் கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் கேபிள் இணைப்பு கொடுப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கலந்தாய்வு கூட்டம்
அப்படி தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் மக்களுக்கு விலையில்லா செட்-டாப் வழங்குவதோடு, கேபிள் கட்டணம், ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.155 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள்களில் இருந்து தனியார் கேபிளுக்கு மாறியவர்களை அரசு கேபிள் சந்தாதரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.