தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள்!

திருப்பூர்: கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள், உணவகங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள்!
தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள்!

By

Published : Apr 14, 2021, 11:59 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் நேற்றைய தினம் (ஏப். 13) 160 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநகராட்சி முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள்!

இந்நிலையில் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணியாமல் இருப்பது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதது, உணவகங்களில் போதிய இடைவெளி இல்லாமல் இருக்கைகள் போடாமல் இருப்பது ஆகியவற்றைக் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் உடனடி அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க:18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details