வடமாநிலங்களிலும், தென் மாநிலங்களின் சில பகுதிகளிலும் நேற்று முதல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அவினாசியில் ஹோலி கொண்டாடிய வட மாநிலத்தவர்கள்
திருப்பூர்: அவினாசியில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
ஹோலி கொண்டாடும் வட மாநிலத்தவர்கள்
இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புலம் பெயர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். குடும்பத்துடன் அவிநாசியில் தாங்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.