தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னதம்பியை பிடிக்க மீண்டும் களமிறங்கிய வனத்துறை

திருப்பூர்: உடுமலை அருகே வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத் துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

சின்னதம்பி

By

Published : Feb 14, 2019, 2:25 PM IST

கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை சின்னதம்பி, தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சுற்றி வருகிறது.


தற்போது திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூர் பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய கரும்பு காட்டில் தஞ்சமடைந்துள்ள சின்னதம்பியை மீண்டும் பிடிக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் இதற்கான பணிகளை வனத் துறையினர் மீண்டும் துவங்கியுள்ளனர்.

இதற்காக 5 வனச்சரகர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் கண்ணாடி புதூரில் முகாமிட்டுள்ளனர். யானை பிடிக்கும் பணிக்காக ஆனைமலை புலிகள் காப்பக யானை முகாமில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கும்கி யானைகளான கலீம் மற்றும் சுயம்பு யானைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்து செலுத்துவதற்கான ஆலோசனைகளில் வனத் துறை மருத்துவர்கள் மனோகரன், கலைவாணன், விஜயராகவன், அசோகன், ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் யானையை பிடிக்க முடிவு செய்துள்ள வனத் துறையினர் தொடர்ந்து சின்னதம்பியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details