தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய 8 கோடி ரூபாய்

திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் வீடடில் இன்று(மார்ச்.17) நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ. 8 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர்
வருமான வரித்துறையினர்

By

Published : Mar 17, 2021, 10:56 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ், திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகர் ஆகியோர் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது வரை 8 கோடி ருபாய் அளவிற்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

திருப்பூரில் ஒரேநாளில் மதிமுக, மக்கள் நீதி மய்யம் , திமுக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details