திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரையிலும் 61 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பேர், அவிநாசியில் 3 பேர், உடுமலைப்பேட்டையில் இரண்டு பேர், தாராபுரத்தில் ஒருவர், பல்லடத்தில் இரண்டு பேர், திருப்பூர் ஊரகப் பகுதிகளில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.