தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.
திருப்பூரில் அதிகரிக்கும் கரோனா - கரோனா தொற்று
திருப்பூர் : இன்று மட்டும் 64 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது.

corona
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது. அதே போல், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 17 பேர் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.