தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2020, 6:59 PM IST

ETV Bharat / state

திருப்பூரில் அதிகரிக்கும் கரோனா... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு!

திருப்பூர்: மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனா தடுப்புப் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்தும், அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், மருந்து உபகரணங்கள் வாங்கி கொடுப்பதற்கு உதவியாளர்கள் நியமிப்பது குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் உடனிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details