திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது, பல்லடம் நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியது. பின்னர், அந்த கார் முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் மீதும் மோதி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த பல்லடத்தைச் சேர்ந்த ரவி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி சென்ற போட்டோ பிரேம் கடை உரிமையாளர் செந்தில்குமார் (48) என்பவர் படுகாயமடைந்தார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.