திருப்பூர்: பல்லடம் பகுதியில் அதிமுக நகர மகளிரணி செயலாளராக இருப்பவர் செல்வி. செல்விக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் (கிராம நிர்வாக அலுவலகத்தில் தண்டல்காரர்). நாகராஜின் இடத்தில் செல்வியின் வீட்டின் சுற்றுச்சுவர் இருப்பதாக கூறுவதால் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாகராஜ், சிலரை அழைத்து வந்து செல்வி வீட்டின் சுற்றுச்சுவரை இடிக்க முயன்றுள்ளனர். அப்போது கோபமடைந்த செல்வி மற்றும் அவரது தாயார் பாப்பாத்தி ஆகியோர் நாகராஜ் மற்றும் அவருடன் வந்த முதியவரை அடித்து கீழே தள்ளிவிட்டனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பதிலுக்கு நாகராஜ் தரப்பினரும் அடித்ததாக கூறபடுகிறது. இதில் செல்வி மற்றும் பாப்பாத்தி காயமடைந்ததை அடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
முதியவரை கீழே தள்ளிய அதிமுக மகளிரணி செயலர் இது குறித்து பல்லடம் காவல் துறையினர் இன்று (மார்ச் 26) விசாரணை மேற்கொண்டபோது, இந்த வீடியோவை காண்பித்து செல்வியிடம் கேட்கையில், தங்களுடைய இடத்திலுள்ள சுற்றுச் சுவரை நாகராஜ் தரபினர் இடிக்க முயன்றதாகவும், தடுக்க சென்ற தன்னையும் தாயையும் தாக்கியதால் பதிலுக்கு தாங்களும் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கணவரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபர் மீது காவல் ஆணையரிடம் மனைவி புகார்