தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட முயன்றவர் கைது!

திருப்பூர்: ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்துப் புழக்கத்தில்விட முயன்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Color Xerox note confiscation  கள்ள நோட்டு  கள்ள நோட்டு கைது  கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள்  Fake Money  Fake Money Arrest  A Man Arrested For Attempt To Fake Money Distributing in tiruppur  A Man Arrested For Attempt To Fake Money Distributing
A Man Arrested For Attempt To Fake Money Distributing

By

Published : Apr 12, 2021, 1:08 PM IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள படியூர் காவல் சோதனைச்சாவடியில் நேற்று (ஏப். 11) மாலை காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில், தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் (34) என்பதும், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அவரிடம் இருந்ததும் திருப்பூரில் புழக்கத்தில் விடுவதற்காகக் கொண்டுசென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

இதையடுத்து, கண்ணன் வீட்டில் ஜெராக்ஸ் எடுத்து கட் செய்யாமல் இருந்த 72 ஆயிரம் ரூபாய், கலர் பிரிண்டர் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details