2018-19 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
முதலிடம் பிடித்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
தேர்ச்சி விழுக்காட்டில் முதலிடம் பெற்றதற்கு காரணம் மாணவர்கள், ஆசிரியர்கள் தான் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.53 விழுக்காடு தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153 தேர்ச்சியடைந்தவர்கள் 28,723 பேர் எனவும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் போல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், முதலிடத்திற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.