திருப்பத்தூர்:உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர் குஷ்வாஹா, கடந்த 19 மாதங்களாகத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆய்வுக்குப் பிறகு, அவர் பணி மாறுதல் செய்யப்பட்டார். அதன்படி சமூக நல பாதுகாப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு, சென்னை செல்ல உள்ள அமர்குஷ்வாஹாவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
அனைத்து துறை அலுவலர்கள் நடத்திய இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ஷிவாலிகா ஆகியோருக்கு சந்தன மாலை அனுவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது திருப்பத்தூர் சார் ஆட்சியர் லட்சுமி, கிருஷ்ணர் - ராதை சிலையை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்தினார். இதனையடுத்து பேசிய அமர் குஷ்வாஹா, “நான் எனக்குக் கொடுத்த பணியை, என்னால் முடிந்த வரை இந்த திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்குச் செய்துள்ளேன்.