தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி:13 வயது மாணவன் உயிரிழப்பு - சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு போலி மருத்துவர் பார்த்த சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

suriya prakash
சூரிய பிரகாஷ்

By

Published : Jul 6, 2023, 3:31 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தோப்பலகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஜாடன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி சக்கரவர்த்தி. இவரது ஒரே மகனான சூரிய பிரகாஷ்(13), நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(ஜூலை 4) மாலை சூரியபிரகாஷிற்கு திடீரென்று உடல்நிலைக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு சூரிய பிரகாஷை அவரது பெற்றோர் நாராயணசெருவு பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:Tenkasi News:தொடர் கனமழை - மேக்கரை பகுதியில் குளம் உடைந்ததால் வயல்வெளிகளை சூழ்ந்த வெள்ளம்!

அங்கு சூரியபிரகாஷிற்கு பரிசோதனை செய்து, காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி, கோபிநாத் ஊசி செலுத்தியதாக தெரிகிறது. அதன் பின்பு வீடு திரும்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே சூரிய பிரகாஷ் மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக நாட்றம்பள்ளி அரசு சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சூரிய பிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மாணவன் சூரிய பிரகாஷிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கோபிநாத்தை பிடித்து வாணியம்பாடி நகர நிலையத்தில் வைத்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் போலி மருத்துவர் எனத் தெரியவந்தது. பின் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மாரிமுத்து தெரிவிக்கையில், மாணவன் சூரியபிரகாஷிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு அவர் முறையாக மருத்துவம் படித்தாரா அல்லது போலியாக மருத்துவம் பார்த்து வருகிறாரா என விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

போலி மருத்துவரால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Coimbatore: வால்பாறையில் வெளுத்து வாங்கும் மழை - 2ஆவது நாளாக பள்ளி,கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details