திருப்பத்தூர்:ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “நாங்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்து அரசியலுக்கு வரவில்லை. பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள்.
மக்களுக்காக போராடியதற்கு என் மீது 128 வழக்கு உள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட வழக்குதான் அதிகம். சீருடை அணியாத மக்கள் ராணுவம், நாம் தமிழர் கட்சியினர். இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியல், விளம்பர அரசியல்தான் உள்ளது. மக்களுக்கான அரசியல் என்பது கிடையாது.
8 வயது குழந்தையை 22 நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர். அவரது தந்தை தனது பிள்ளையை எல்லா இடத்திலும் தேடினேன், ஆனால் கோயிலில் மட்டும் தேடவில்லை, அது புனிதமான இடம், அங்கு இது போன்ற இழிவான செயலை செய்வார்களா என்ற நம்பிக்கையில் அங்கு மட்டும் தேடமால் விட்டுவிட்டேன் என பதிவிட்டது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.