திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் ஊராட்சி சிங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி கோமதி(25) இவர் நிறைமாத கற்பிணி. இந்த நிலையில் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கணாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இதையும் படிங்க:வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!
அதனை தொடர்ந்து கோமது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து நேற்று காலை (ஆக்ஸ்ட் 17) ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு கோமதிக்கு மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்ப்பட்டது.
ஆனால் கோமதி உடல்நிலை மோசமாக உள்ளதாக கருதிய ஆண்டிப்பனூர் மருத்துவர்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.