தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலளிக்காமல் கரோனா சிகிச்சை: தனியார் கிளினிக்கிற்குச் சீல்

வேலூர்: கரோனா பெருந்தொற்று நோயாளி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலளிக்காமல் சிகிச்சை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, தனியார் கிளினிக்கிற்குச் சீல்வைக்கப்பட்டது.

தனியார் கிளினிக்கு சீல்
தனியார் கிளினிக்கு சீல்

By

Published : Apr 17, 2020, 11:05 AM IST

வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த பெண் (52) ஒருவருக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டு, சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். தற்போது, இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே, முதலில் பாதிக்கப்பட்ட 52 வயது பெண்ணுக்கு அருகிலுள்ள, இந்திரா நர்சிங் ஹோம் என்ற தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலளிக்காமல் கரோனா சிகிச்சை

ஆனால், சம்பந்தப்பட்ட கிளினிக் இது குறித்து எவ்வித தகவலும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கிளினிக்கிற்கு சீல்வைக்கப்பட்டது. இங்கு பணியாற்றியவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்றுக்கான பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. பின்னர், வீடுகளில் 14 நாள்கள் தனிமையிலிருக்க அறிவுறுத்தப்பட்டது.

காய்ச்சல், சளி, இருமல் என தனியார் கிளினிக் அல்லது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்காமல்விட்டு, தீவிரமடைந்த பின்னர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் தனியார் மருத்துவமனை, கிளினிக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details