திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவரது மகன் பிரேம்குமார் (24), அவரது நண்பர் ராஜ் கிரண் (27) இருவரும் ஆம்பூர் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தாகக் கூறி ஆம்பூர் நகர காவல் துறையினர் நேற்று (செப்.21) இரவு கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்.22) காலை காவல் நிலையம் வந்த மணி, சிலரின் துாண்டுதலின் பேரிலேயே காவல் துறையினர் தனது மகனை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளதாகவும், உடனடியாக தனது மகனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.