திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் சுமார் நான்கு லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகக் கணக்குத் தணிக்கை அலுவலர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் 2019-20ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பசுமை வீடு திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து தெரிவிப்பதற்குக் கணக்குத் தணிக்கைக் குழு அலுவலர் பொன்னடி தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஊராட்சியில் 2019-20ஆம் ஆண்டில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 292 ரூபாய் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற 19 விதமான பணிகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டதில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்று லட்சத்துக்கான பணிகள் கணக்கில் வரவில்லை எனவும்,