தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2020, 4:20 PM IST

ETV Bharat / state

சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா காய்கறி சந்தை: அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூர்: சமூக இடைவெளியுடன், சரியான விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறதா என்று பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா காய்கறி சந்தை: அமைச்சர் ஆய்வு!
சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா காய்கறி சந்தை: அமைச்சர் ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையை இன்று மாவட்ட ஆட்சியர் சிவனருள், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகள் நியாயமான விலையில் விற்கப்படுகிறதா அல்லது அளவுக்கு அதிகமான விலையில் விற்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடையாக அமைச்சர் விலையைக் கேட்டு உறுதி செய்தார்.

சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா என்றும் அமைச்சர் ஆய்வு செய்தார். கடை உரிமையாளர்களிடம் கரானோ வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோய். இது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிர்க்கொல்லி நோய் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா காய்கறி சந்தை: அமைச்சர் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமையாக இருங்கள். அவரோடு தொடர்புடையவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். நமது மாவட்டத்தில் கரானோ என்பது முழுமையாகத் தடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சுமார் 1700 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் கரானோ பெருந்தொற்று உறுதிசெய்யப்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க: எலிக்கு லாக் டவுன் பாடம் எடுத்த பூனை- பார்த்திபன் பரவசம்

ABOUT THE AUTHOR

...view details