திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், பூக்கடை பஜார், பிரதான வாணியம்பாடி சாலை ஆகிய பகுதிகளில் மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி தலைமையில் வாகனங்கள், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது ’உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்’, ’தவறாமல் வாக்களிப்பீர், வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்’, ’நமது இலக்கு 100 விழுக்காடு வாக்குப்பதிவு’, ’வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்’ போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின்போது போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர், அரசு அலுவலர்கள், மகளிர் திட்ட குழு பெண்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது