தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஒருவருக்கு கண் பகுதியில் பாதிப்பு: கறுப்பு பூஞ்சையா என சோதனை!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளிக்கு கண் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், அவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

பெண் ஒருவருக்கு கண் பகுதியில் பாதிப்பு: கருப்பு பூஞ்சையா என சோதனை!
பெண் ஒருவருக்கு கண் பகுதியில் பாதிப்பு: கருப்பு பூஞ்சையா என சோதனை!

By

Published : May 26, 2021, 9:12 PM IST

திருப்பத்துர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன். இவரது, மனைவி செல்வி (40).

இவர் ஆம்பூரிலுள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த மாதம் மே 27ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பிய செல்வி, மீண்டும் கண் பகுதியில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

இதனையறிந்த கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மருத்துவ குழுவினரை அனுப்பி அவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details