திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் கிராமத்தில் அபெக்ஸ் விளையாட்டுக் குழு சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்ட காவலர்கள் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வெற்றி பெற்ற கபடி குழுவினருக்கு 10,000 ரூபாயும் 10 அடி உயரமுள்ள கோப்பையும் வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர், "இனிவரும் காலங்களில் காவல்துறை சார்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். காவலர்களின் பணி நேரம் போக ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாட முறையான பயிற்சி அளிக்கப்படும்.
பொதுமக்களோடு காவல் துறையினர் விளையாடுவது நல்லுறவு ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி!