தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து: 11 பேர் படுகாயம்

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற மினிவேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 6:19 PM IST

Updated : Dec 2, 2022, 10:13 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பேருந்து நிலையம் அருகே இன்று (டிச.2) காலை கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வேலூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் கன்டெய்னர் லாரி திரும்பியதால், பின்னால் ஐயப்ப பக்தர்களுடன் வந்த மினி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச்சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 22 பேர் கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குச்சென்று, தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வேனில் பயணம் செய்த சூரியா, விஜய், சத்தியராஜ் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்கள் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கும், பலத்த படுகாயம் அடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தம்பி அனுப்பிய ரூ.500 மணி ஆர்டர்... ஷாக்கான அக்கா... நடந்தது என்ன?

Last Updated : Dec 2, 2022, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details