தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியை மீறி நடைபெற்ற தேமுதிக கூட்டம்: காவல் நிலையத்தில் புகார்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நேற்று இரவு (ஜன. 31) நடந்த தேமுதிகவின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக கழக இணை செயலாளர் எல்.கே. சுதீஷ், தேமுதிக நிர்வாகிகள் மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

case filed against dmdk party meet in ambur
case filed against dmdk party meet in ambur

By

Published : Feb 1, 2021, 3:25 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இரவு தேமுதிகவின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக இணை செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.

அனுமதியை மீறி நடைப்பெற்ற தேமுதிக கூட்டம்
இந்ந நிலையில் ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் இன்று காலை ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் ஆலங்குப்பம் பகுதியில் நடைப்பெற்ற தேமுகவின் ஆலோசனை கூட்டம் தடையை மீறி நடத்தப்பட்டதாகவும், கூட்டம் நடத்துவதற்கான உரிய அனுமதி பெறவில்லை எனவும் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு எண் 188, 144, 269, 270, 51 ஆகிய பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க... '60 அடி ஆழத்தில் திருமணம்' - கடலில் அரங்கேறிய காதல்!

ABOUT THE AUTHOR

...view details