தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி மதுபானம் விற்பனை - ஓட்டல் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடி: ஊரடங்குத் தடையை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

liquor drinking
liquor drinking

By

Published : Apr 5, 2020, 7:13 PM IST

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, நேற்றிரவு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில், சம்பவ இடத்திற்குச் சென்று காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, உணவக உரிமையாளர் திலகச்சந்திரன், உணவக மேலாளர் சன்னாசி முத்து ஆகிய இருவர் மீதும் மத்திய பாகம் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இதனைத்தொடர்ந்து உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 744 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் பல உயர் ரக மது வகைகளும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவால் சென்னையில் காற்று மாசு குறைவு!

ABOUT THE AUTHOR

...view details