தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணறு தூர்வாறும் போது பைரவர், காளியம்மன் சிலைகள் கண்டுபிடிப்பு!

கோவில்பட்டி: கிணறை தூர்வாறும் போது, இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில் காளியம்மன், பைரவர் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By

Published : Mar 29, 2019, 10:17 PM IST

பைரவர், காளியம்மன் சிலைகள் கண்டுபிடிப்பு

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவரது மகன் வேல்சாமி (வயது 49). இவர் நாலாட்டின்புதூர் முக்குரோட்டில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

இருவருக்கு முடுக்குமீண்டான்பட்டி – தோணுகால் செல்லும் சாலையில் ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 3 நாள்களாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வெள்ளப்பாறையை சேர்ந்த செங்கோடன் மகன் துரைச்சாமி (40) தலைமையில் 10 பேர் கொண்டு குழுவினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்ற போது 2 பெரிய சாக்குமூடைகளில் சுமார் 2 அடி உயரமுள்ள சிங்க வாகனத்துடன் கூடிய காளியம்மன், நாய் வாகனத்துடன் கூடி பைரவர் சிலைகள் இருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு நிலத்தின் உரிமையாளர் வேல்சாமி தகவல் கொடுத்தார். தகவலறிந்து சிலைகளை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details