தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2019, 12:35 PM IST

ETV Bharat / state

அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

kadampur-raju

தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இயற்கை வளப் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. கோவில்பட்டியில் போக்குவரத்து வசதிக்காக, லாயல் மில் மேம்பாலம் - லட்சுமி மில் மேம்பாலம் வரை 2.2 கி.மீ. துாரம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணிகள் ஒரு மாத காலத்துக்குள் முடிவடையும் என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள வார்டுகளுக்கான மறுவரையறை பணிகள் 99% முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகளை முடித்துவிட்டு, அரசுக்கு அறிக்கையாக சமர்பித்துவிட்டு தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details