தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனைக்கு எச்சரிக்கை

தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் அலைகழித்தாக புகார் எழுந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனை!
நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனை!

By

Published : Sep 17, 2022, 10:34 PM IST

தூத்துக்குடி மாவட்டம் குமரிக்காடு பகுதியை சேர்ந்த துர்கா என்ற கர்ப்பிணி மூன்று நாட்களாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் இன்று மாலை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு பிரசவ வலி உடனேயே சென்றுள்ளார். இதுகுறித்த செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனை!

இதுகுறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் பொன் இசக்கி அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண் துர்காவிடம் நலம் விசாரித்தார். உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மீண்டும் அங்கு வருமாறும் கேட்டுகொண்டார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.

அதன்பின் பொன் இசக்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். நாளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விவாகரத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"இங்க வந்த பாத்த ஒரு குப்பையும் இல்ல"... கடற்கரையை சுத்தம் செய்ய சென்ற மாணவர்கள் செல்பியுடன் டைம் பாஸ்...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details