தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் சாலை பாதுகாப்பு சங்கம் மற்றும் இணையதளம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சாலை பாதுகாப்பு சங்கத்தை தொடங்கிவைத்தார்.
2020-2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் சாலை விபத்தால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்ற வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்றாக மாணவ, மாணவிகள் சாலை விதிகளை அறிந்துகொள்ள சாலை பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 211 பள்ளிகளைச்ப் சேர்ந்த ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புவரை பயிலும் 21,100 மாணவ, மாணவிகள் இதில் உறுபினர்களாக கொண்டு சாலை பாதுகாப்பு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் www.safetytuty.org என்ற இணையதளத்தையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசும் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ”தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த வருடம் மாவட்டத்தில் விபத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட மூன்று விழுக்காடு குறைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க:இனாம்காரியந்தல் ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு