தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (28). இவரது நண்பர் முருகன் (30) இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இதனிடையே, கடந்த வாரம் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் லட்சுமணன், முருகனை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை முருகன் தனது மற்றொரு நண்பரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து லட்சுமணனை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, லட்சுமணனை நள்ளிரவில் அண்ணா நகருக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். லட்சுமணன் மது குடித்துக் கொண்டிருக்கும்போது அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், அவரது வலது கை துண்டானது.