தமிழ்நாடு

tamil nadu

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க நூதன போராட்டம்

By

Published : Nov 26, 2019, 11:56 PM IST

தூத்துக்குடி: இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

தூத்துக்குடியயில் தேசிய விவசாயிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் வேப்பிலை அடித்து நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கியபடி கோட்டாட்சியரிடம் மனு ஒன்றினை அளித்தனர்.

அதில்,திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் பிர்கா கடந்த 2008ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைத்த நிலையில், தொடக்கக் கல்வித்துறை, மின்வாரியம், ஊராட்சி ஒன்றியம் ஆகியவை குருவிகுளம் யூனியனில் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு, உதயமான தென்காசி மாவட்டத்துடன் குருவிகுளம் யூனியன் உள்ளதால், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது தேவைகளுக்கு அங்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு முன்னர் இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி ஒழிப்பு பேரணி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details