தூத்துக்குடி மாவட்டம் தனசேகரன் நகர் பகுதியில் உள்ள ஓர் குப்பைத் தொட்டியில் 55 வயதுடைய மூதாட்டியின் உடல் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் உடல் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன சுவாமியின் மனைவி வசந்தியினுடையது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வசந்தியின் மகன் முத்துலெட்சுமணன் (35) என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தனது தாயார் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்தை போர்வையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாயின் உடலை குப்பை தொட்டியில் வீசிய மகன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உடலை உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உடல் நலக்குறைவால் வசந்தி இறந்தாரா இல்லை வேறேதும் காரணமா என விசாரணை நடத்திவருகின்றனர்.