தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 11:28 PM IST

ETV Bharat / state

சர்வோதய சங்க கதர் கிராம விற்பனையை 120 கோடியாக உயர்த்துவோம் - மதுரை மண்டல இயக்குநர்

தூத்துக்குடி: சர்வோதய சங்க கதர் கிராம விற்பனையை 120 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மதுரை மண்டல இயக்குநர் சின்னத்தம்பி தெரிவித்தார்.

மதுரை மண்டல இயக்குனர் சின்னத்தம்பி
மதுரை மண்டல இயக்குனர் சின்னத்தம்பி

தூத்துக்குடி சர்வோதய சங்கத்தின் புதிய காதி கிராமோத்யோக் பவன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுரை மண்டல துணை இயக்குநர் சின்னத்தம்பி, புதிதாக தொடங்கப்பட்ட காதிபவனை திறந்து வைத்தார். இதில், முதல் விற்பனையை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சர்வோதய சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் சின்னத்தம்பி பேசுகையில், "துறை ரீதியான மானியத்தொகை 15 லட்சம் ரூபாய் உள்பட 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய காதி கிராமோத்யோக் பவன் இன்று திறக்கப்பட்டுள்ளது. கதர் கிராமத் துறையில் 3,700 பேர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். மறைமுகமாக 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இது தவிர தேன் வளர்ப்பு, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நிதி உதவிகள் அழைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான பயிற்சிகளையும் அளித்து கதர் கிராம தொழில் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரை மண்டல இயக்குநர் சின்னத்தம்பி

கடந்த ஆண்டு 55 கோடி ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 81 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை 120 கோடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details