தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துறைமுக ஏற்றுமதி-இறக்குமதியில் வளர்ச்சி: துறைமுக தலைவர் - Thoothukudi port

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் கடந்த ஆண்டை விட சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறினார்.

துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன்
துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன்

By

Published : Aug 16, 2021, 6:57 AM IST

இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் அவ்விடம் வந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டு, கரோனா விதிமுறைகளை பின்பற்றி சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது.

7.14 விழுக்காடு வளர்ச்சி

விழாவில், ஊரடங்கு காலத்தில் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் அவ்விடம் வந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை

இதைத்தொடர்ந்து துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் உரையாற்றுகையில், "உலகெங்கும் நிலவிய கரோனா அச்சுறுத்தலால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த வாணிபம், அதிகரித்துள்ள கப்பல் கட்டணம், சரக்கு பெட்டகங்கள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணிகள் இருந்தாலும்,

  • இந்த நிதியாண்டின் ஜூலை மாதம்வரை இந்திய பெரும் துறைமுகங்கள் வழியாக 235 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 21 விழுக்காடு அதிகமாகும். இதேபோல தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம்,

  • இந்த நிதியாண்டின் ஜூலை மாதம்வரை 11.33 மில்லியன் டன் சரக்குகளையும் 2.68 லட்சம் புதிய சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, கடந்த ஆண்டைவிட 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள், உதிரி பாகங்கள் ஏற்றுமதி-இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அதன்படி இதுவரை ஆயிரத்து, 400 காற்றாலை இறகுகள் துறைமுகம் வழியாக கையாளப்பட்டுள்ளது.

துறைமுக வளர்ச்சிக்காக துறைமுக ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் அடங்கிய, துறைமுக அலுவலர்கள் அடங்கிய வணிக மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் அவ்விடம் வந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை

துறைமுகத்தில் அதிகரித்துவரும் சரக்குப் பெட்டக கையாளுதலை கருத்தில்கொண்டு சரக்கு அணையும் தளம் ஒன்பதாவது கப்பல் தளம் 6 லட்சம் மில்லியன் டி.யூஸ். சரக்குகளை கையாளும் வகையில் உற்பத்தி ரூ. 34.17 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்.

2000 ஏக்கரில் தொழிற்சாலைகள்

துறைமுகத்தின் வடக்கு சரக்கு அணையும் தளமானது 6.96 மில்லியன் லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறன்கொண்ட வகையில் ரூ. 403 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் உறுதியளித்துள்ளார்.

மேலும், சரக்கு கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக இந்திய தொழில்நுட்பத்துடன் புதிய மென்பொருளினை ரூ. 27.18 லட்சம் செலவில் வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் 2000 ஏக்கர் அளவில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் உர தொழிற்சாலை, காற்றாலை இறகுகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பெட்ரோலிய தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை அமைப்பதற்கு தொழில் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'சாத்தூர் - தூத்துக்குடிவரை இரட்டை ரயில் பாதை பணி - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு'

ABOUT THE AUTHOR

...view details