தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2019, 10:14 AM IST

ETV Bharat / state

pearl city became murder city: மூன்று மாதங்களில் 17 கொலைகள் - தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரங்கேறி வரும் தொடர் கொலை சம்பவங்களால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

thoothukudi

நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் முருகேசன், விவேக் ஆகிய இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு சற்றும் தனியாத நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் ஓர் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது மேலும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

அதனடிப்படையில், தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டுரங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து(36) என்பவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் வெள்ளி விலை நிலவரம், டீசல் பெட்ரோல் விலை நிலவரம் போல், தற்போது தூத்துக்குடியில் தினசரி கொலை நிலவரங்களை வெளியிடும் நிலையில் தான் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தூத்துக்குடியில் நடைப்பெற்ற கொலைச் சம்பவங்கள் பின்வருமாறு,

02.07.19 -தூத்துக்குடியில் பெண் படுகொலை.

04.07.19 -குளத்தூரில் இரட்டை ஆணவப் படுகொலை.

08.07.19 -விளாத்திகுளத்தில் ஆசிரியர் படுகொலை.

10.07.19 -தூத்துக்குடியில் மீனவர் படுகொலை.

13.07.19 -தூத்துக்குடியில் பெண் அடித்துக் கொலை.

15.07.19 -கயத்தாறில் மூதாட்டி படுகொலை.

20.07.19தூத்துக்குடியில் பார் ஊழியர் படுகொலை.

22.07.19 -குலையன்கரிசலில் திமுக பிரமுகர் படுகொலை.

28.07.19 -தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை.

31.07.19 -தென்திருப்பேரையில் பெண் வெட்டிக்கொலை.

09.08.19 -கோவில்பட்டியில் பெண் வெட்டிக்கொலை.

11.08.19 -முறப்பநாட்டில் வழக்கறிஞர் படுகொலை.

21.08.19 -தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ஒருவர் படுகொலை.

27.08.19 -தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக்கொலை.

12.09.19 -வல்லநாட்டில் இளைஞர் படுகொலை.

15.09.19 -தூத்துக்குடியில் இரட்டை படுகொலை.

16.09.19 -தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே இளைஞர் படுகொலை.

மொத்தம், 17 கொலைகள், இந்த தொடர் கொலைச் சம்பவங்களால், உண்மையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தவறி வருகிறதா அல்லது தவறிழைத்து வருகிறதா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் எழத் தொடங்கி விட்டது. இதனால் தூத்துக்குடியில் அச்சம் நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details