தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஜெயலலிதா இறந்து விட்டதனால் புனிதமாவதில்லை" அண்ணாமலை விமர்சனம் குறித்து சீமான் கருத்து

ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சனம் செய்தது பற்றி கேட்டதற்கு ஜெயலலிதா அவர்கள் செய்த எல்லா தீமைகளும் இறந்து விட்டதனால் புனிதமாகி விடாது. அவர் ஊழல் செய்ததால் தான் சிறைக்கு சென்றார் என சீமான் கூறினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 13, 2023, 7:56 PM IST

அண்ணாமலைக்கு சீமான் ஆதரவு

தூத்துக்குடி: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தென் மாவட்டங்களில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தேர்தல் நேரம் வரும் போது வருமான வரி சோதனை நடக்கிறது சகஜம் தான். இந்த சோதனை நாளாக, நாளாக நிறைய நடக்கும். ஜெயலலிதா அவர்கள் செய்த எல்லா தீமைகளும் இறந்து விட்டதனால் புனிதமாகி விடாது. அவர் ஊழல் செய்ததால் தான் சிறைக்கு சென்றார். கருணாநிதி போல ஒருவர் இதுவரை இம்மண்ணில் பிறக்காத மாதிரியும், தமிழினத்திற்கு அவர் செய்த தொண்டு போல யாரும் செய்யாத மாதிரியும் பேசிக் கொண்டு வருகின்றனர்.

ஓர் ஆண்டுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்த பணம் எது? நாட்டில் அத்தனை கேடு கெட்ட திட்டத்துக்கும் வேர் தேடி போனால் அதை செய்வது திமுக தான் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வாறு நடக்கவில்லை. ஆண்டு முழுக்க பிறந்தநாளை கொண்டாடுவது எந்த மாநிலத்தில் நடக்கின்றது. அந்த குழுவின் தலைவர்களாக அமைச்சர்கள் இருக்கின்றனர்.

கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கவனம் செலுத்தும் இவர்கள் மக்கள் பிரச்சனையை எவ்வாறு கவனிப்பார்கள்? கீழ் பவானியில் விவசாயிகள் ஆறாவது நாளாக பட்டினி கிடக்கின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள் போய் பார்க்கவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 320 நாட்களாக போராடுகின்றனர். யாரும் போய் பார்க்கவில்லை.

உலகத்திலேயே யாரும் கொடுக்காத ஆட்சியை நீங்கள் (திமுக) கொடுப்பதாக பேசி வருகின்றனர். கருணாநிதி போல தமிழ் இனத்திற்கு துரோகம் செய்த ஒரு தலைவர் இன வரலாற்றில் உண்டா? அண்ணாவுக்கு பின் இந்த நாட்டில் ஊழல், மதுவினை தொடங்கியவர்கள் இவர்கள், கருணாநிதிக்கு மாவட்டத்திற்கு ஒரு சிலை வைத்து கல்யாண மண்டபம், நூலகம் மற்றும் பேனா சிலை வைத்தால் அவர் புனிதராகி விடுவாரா? வரலாறு அப்படி பதிவு பண்ணி விடுமா? மாறி மாறி இவர்களே புனிதர் பட்டம் திட்டிக்க வேண்டியது தான் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ”ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சின்னு இருக்குது, இதில் தம்பி துணை முதல்வர் ஆனால் என்ன சொல்வது என்று புரியவில்லை. வரட்டும் இது மக்களாட்சி காலத்தில் நடக்கின்ற மன்னர் ஆட்சி. அப்பா, மகன், பேரன் இதை கடந்து செல்லவேண்டியது தான்” என கூறினார்.

இதையும் படிங்க: "ரொம்ப சீன் போடாதீங்க தம்பி" - மனு கொடுக்க வந்தவரிடம் ஆவேசமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன்!

ABOUT THE AUTHOR

...view details