தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழல் குற்றச்சாட்டில் திமுகவினர் சிறைக்கு செல்லாமல் இருந்தாலே போதும்: ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி!

தூத்துக்குடி: ஊழல் குற்றச்சாட்டுகளால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று, தேர்தல் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

கடம்பூர் ராஜு

By

Published : Oct 12, 2019, 7:32 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. நாங்குநேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, நாங்கள் சிறைக்கு செல்லப்போவதும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்னும் முடியவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே ராசா, கனிமொழி உள்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் விரைவில் பறிபோகக் கூடிய நிலையில் இருக்கிறது. அதனால் அந்த தொகுதிகள் காலியாகி தேர்தல் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஊழல் வழக்கில் திமுகவினர் சிறைக்குச் செல்லாமல் இருந்தாலே போதும். ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அவருடைய முதலமைச்சர் கனவு, கனவாகவே போகும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details