தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் முன்பு நேற்று மாலை திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அந்நிய நாட்டு உணவுப் பொருள்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் வந்த வெள்ளையனை தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்துக்குக் காவல் துறையினர் அனுமதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம்தான். ஆன்லைன் வர்த்தகத்திற்கான கதவை மத்திய அரசு திறந்து வைத்துவிட்டது. இதனால் சில்லறை வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உற்பத்தி செய்பவர், சந்தைப்படுத்துபவர், விற்பனையாளர் என அனைவரும் அந்நியர்களே உள்ளனர்.