தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸிற்கு கமலின் ஆதரவு; ரிசல்ட் ஜீரோ தான் - எச்.ராஜா விமர்சனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்(Erode East Assembly Bypoll) காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் ஆதரவின் ரிசல்ட் என்பது ஜீரோவாக தான் அமையும் எனவும் தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 27, 2023, 6:13 PM IST

காங்கிரஸிற்கு கமலின் ஆதரவு; ரிசல்ட் ஜீரோ தான் - எச்.ராஜா விமர்சனம்

தூத்துக்குடி:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் (Tiruchendur Murugan Temple) பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று (ஜன.27) சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'பாமக நிறுவனர் ராமதாஸ், 'தமிழைத் தேடி யாத்திரை' மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் அப்படியானால், 'தமிழ்' தொலைந்துவிட்டது என்று தான் அர்த்தம். தமிழைத் தொலைத்த திருடன் யார்? திராவிடம் தான்; நீதிக் கட்சி வழியாக வந்தவர்கள் தான், தமிழைத் தொலைப்பதற்காக திராவிடத்தைக் கொண்டு வந்தார்கள்.

தமிழின் முதல் எதிரி - திராவிடம்:திராவிடத்தை அழிக்காவிட்டால், தமிழைக் காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான்' என்று குற்றம்சாட்டினார். அவர், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காற்றில் பறந்த திமுக தேர்தல் அறிக்கை: மேலும், 'தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள்; இதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்' என்றார்.

ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தானே!: 'எனவே, எதிர்த்துப் போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார்? என்று தான் தெரிய வேண்டும்' என்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் (Erode East Assembly Bypoll) காங்கிரஸுக்கு ஆதரவு என கமல்ஹாசன் தெரிவித்ததைப் பற்றி அவர் கூறுகையில், 'காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு குழப்பத்தைத் தான் தரும். ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமல்ஹாசனின் ஆதரவு அமையும்' என கருத்து தெரிவித்தார். மேலும், ஆளுநருடன் திமுக சண்டையிட்டால் 2024-ல் ஜனவரியில் உதயசூரியன் உதிக்காது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Erode east By poll: அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details